இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 14 மார்ச், 2014

எங்கிருக்கிறாய் கண்ணம்மா ...?



என் மனதில்
இருக்கும் கண்ணம்மா ...!!!
யார் நீ ....?
எதற்காக என்னை இப்படி
வதைக்கிறாய் ...?
உன் உருவம் தெரியாது ...
உன் அழகு தெரியாது ...
உன் குணம் தெரியாது ...
உன்னை நினைத்து கவிதை
கவிதையால் வருகிறது ...?

நீ
இந்த உலகில் இருக்கிறாயா ..?
இனிமேல் தான் பிறக்க போகிறாயா ..?
கவிதையில் உன்னை நினைத்து
நினைத்து சித்திரவதை படுகிறேன்
வந்து ஒருமுறை பாராயோ
கண்ணம்மா ...?

ஒரு வேளை நேரில் வந்து
பார்த்தால் உன்னில் நான்
பார்க்கும் அதீத காதல் இருக்குமா ...?
நீ எதிர்பார்க்கும் அதீத காதல்
என்னில் இருக்குமா ..?
யார் தோற்போமோ தெரியவில்லை ...?

கண்ணம்மா  வந்துவிடாதே ...
பாதகர்கள் இருக்கும் பாதாள உலகம்
நம் காதலையும் காமமாய் பார்க்கும்
கலிகால உலகம் - நானும் உன்னை
காமத்துடன் பார்ப்பேன் - அதை புரியும்
மாந்தர்கள் இங்கில்லை ..வராதே
கண்ணம்மா இந்த உலகுக்கு ....!!!

என் உயிர் கண்ணம்மா ...
என் கற்பனை வளத்தை கூட்டு .....
நிஜத்தில் காதலித்தேன் தோற்றேன்
அவள் இரக்கமற்றவள்
காதலை தராமல் வலியை
தந்து விட்டாள்
நிஜ காதலை விட
என் கற்பனை காதல் புனிதமானது ....!!!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக