இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 29 டிசம்பர், 2015

அடுக்கு தொடர் கவிதைகள்

புத்தாண்டு கவிதை
அடுக்கு தொடர் கவிதை
-----------------------------------------

வருக வருக புத்தாண்டே வருக ......
தருக தருக  இன்பவாழ்க்கை தருக......
பொழிக பொழிக  வளம் பொழிக .....
வாழ்க வாழ்க உயிரினங்கள் வாழ்க ......!!!

போ போ பழைய ஆண்டே போ .....
ஓடு ஓடு துன்பங்களோடு ஓடு .....
போதும் போதும் துன்பங்கள் போதும் ....
ஐயோ ஐயோ தாங்காது மனம் ஐயோ....!!!

அணு அணுவாய் பெற்றோம் இன்பம் .....
வண்ண வண்ண கனவுகள் கண்டோம் ....
விடிய விடிய கண் விழித்து உழைத்தோம் ....
ஓட ஓட நினைக்க வைத்தது காலம் .......!!!

இனிக்க இனிக்க வாழ்கையை தா புத்தாண்டே ....
அன்பான அன்பான உறவுகளை தா புத்தாண்டே...
உழைக்க உழைக்க உடல் உறுதியை தா புத்தாண்டே...
நினைக்க நினைக்க ஞானத்தை தா புத்தாண்டே.....!!!

^^^

மொழிக்கவிதை
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்
மாணவர்களுக்கு உதவும் கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக