இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 21 டிசம்பர், 2015

உயிர் காத்தான் நண்பன்

உயிர் காத்தான் நண்பன்
----
வெள்ளத்தில் தத்தளித்தேன் ... 
வீடு வாசலை இழந்தேன் ... 
சொத்துக்கள் மாயமாகின... 
சொந்தங்கள் துடி துடித்தன .... 
பக்கத்தில் நட்பு இல்லையென்றால் ... 
பாடையில் போயிருப்பேன் ......!!! 

உயிர் காப்பான் உற்றதோழன் ... 
உணர்ந்தேன் உயிர் நண்பா .... 
உயிர் காத்த உள்ளங்கள் எல்லாம் ... 
உயிர் நண்பன் என்பேன் .... 
முகம் பாராமல் முகவரி ... 
தெரியாமல் உதவிய நட்புகளே ... 
உங்களுக்கு 
வானமும் வையகமும் ... 
மாற்றல் அரிது .....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக