இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 16 டிசம்பர், 2015

பச்சை புல்வெளி




பச்சை புல்வெளி
-------
பச்சை புல் வெளியில் .....
உச்சி வெய்யிலில் நின்றாலும் ....
உச்சி குளிரும் மனிதனே ....
உச்சி குளிரும் .....!!!

கண் ......
எரிச்சல் உள்ளவர்கள் ....
கண் கூச்சம் உள்ளவர்கள் ....
பச்சை புல் வெளியை ....
உற்று பார்த்துவந்தால்.....
கண்ணின் நோய்கள் தீரும் ....
மனிதா கண்ணின் நோய்தீரும் ....!!!

அதிகாலை வேளையில்....
பனித்துளி பன்னீர் துளிபோல் ...
சுமர்ந்துகொண்டு அழகை ...
காட்டும் பச்சை புல்வெளியில் ....
ஒருமுறை கை நனைத்துப்பார் ....
குளிர்வது கை மட்டுமல்ல ....
மனமும்தான் மனிதா....!!!

பூமிக்கு இயற்கை கொடுத்த .....
பச்சை கம்பளம் புல்வெளி ....
துணிப்புல்  மேயும் முயல் ....
அடிப்புல் வரை மேயும் மாடு ....
பறந்து திரியும் பட்டாம் பூச்சி ....
பச்சைப்புல் வெளியின் கதகளிகள் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக