இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 29 டிசம்பர், 2015

பேச்சுத்தமிழ் கவிதைகள்

சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!!
பேச்சுத்தமிழ் கவிதைகள் 
----------------------------------------------

வெத்தலைய வாய்நிறைய போட்டு ....
வீராப்பாய் வெறும் வார்த்தைபேசி ....
ஒத்தரூபா காசுகூட இல்லாமல் ....
சுத்தி திரியிறாயே சித்தப்பு ....
இது தப்பெண்னு தெரியல்லையோ ....
சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!!

ஊராருக்கு ஞாயம் சொல்லி ...
நாட்டாமை என்ற பெற்றெடுக்கும் ....
சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....
உன் வீட்டு ஞாயத்தை எந்த ....
நாட்டாமை சொல்லப்போறாறோ ...?
சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!!

வேட்டியை மட்டும் மடிச்சுகட்டி ....
வெள்ளத்துரைபோல் நடிப்பு காட்டி ....
வேசம் கலைந்தால் வெளுத்துபோகும்....
சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!!

^^^

மொழிக்கவிதை 
கவிப்புயல் இனியவன் 
யாழ்ப்பாணம் 
மாணவர்களுக்கு உதவும் கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக