இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 28 டிசம்பர், 2015

நாட்டை காப்போம் எழுந்திரு......

நாட்டை காப்போம் எழுந்திரு......
---------

நாட்டை காப்போம் எழுந்திரு ....
ஆளுக்கு ஒரு ஆயுதம் ஏந்தியல்ல....
ஆளுக்கு ஒரு மரம் நட்டு ....
நாட்டை காப்போம் எழுந்திரு.........!!!

நாட்டை காப்போம் எழுந்திரு......
குண்டுகள் போட்டு அல்ல ....
குப்பைகளை தொட்டிக்குள் போட்டு ....
நாட்டை காப்போம் எழுந்திரு......!!!

நாட்டை காப்போம் எழுந்திரு......
ஆயிரம் மரணங்களை ஏற்படுதியல்ல ....
ஆயிரம் ஆறுகளை பராமரித்து ....
நாட்டை காப்போம் எழுந்திரு......!!!

நாட்டை காப்போம் எழுந்திரு......
கல்லறையில் காவியம் எழுதவல்ல ....
கடல் வளத்தை சுரண்டுபவரிடமிருந்து .....
நாட்டை காப்போம் எழுந்திரு......!!!

நாட்டை காப்போம் எழுந்திரு......
வல்லரசு ஆதிக்கத்தை காட்டவல்ல ....
வல்லரசுகளின் சுரண்டலிலிருந்து .....
நாட்டை காப்போம் எழுந்திரு......!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக