இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

நீ சிரித்த சிரிப்பை

நீ சிரித்த சிரிப்பை
புகைப்படமாக எடுத்திருக்கிறது
என் கண்கள் ....!!!

உன் நடையின் நளினத்தை ...
சிலையாக வடித்திருக்கிறது
என் மனம் ....!!!

உன் வார்த்தைகளை ...
நாடா பதிவாக பதிந்திருக்கிறது ..
என் மூளை ....!!!

இன்னும் விஞ்ஞானம் வளரவில்லை ...
நான் எடுத்த புகைப்படத்தை
நான் வடித்த சிலையை ...
நான் பதிந்த நாடா பதிவை ...
உனக்கு காட்ட ...???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக