இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 7 ஜூலை, 2016

காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!

உனக்காக 
எதையும் தாங்குவேன் 
நான் சுயநலவாதி இல்லை 
உன் இன்பத்தில் மட்டும் 
பங்குகொள்ள ......!!!

நீ காதலில் ஒரு நாணயம் 
இரண்டு பக்கமும் விழுகிறாய் 
நீ எந்த பக்கம் விழுவாய் என்ற 
ஏக்கத்துடன் வாழ்கிறேன் 
அதிலும் சுகமுண்டு ....!!!

@@@
உன்னுடன் பேச வேண்டும்
உன்னுடன் மட்டும் பேச வேண்டும்
உள்ளத்தில் இருப்பதை எல்லாம்
உள்ளதை உள்ளபடி பேசவேண்டும்
உண்மையுடன் பேசவேண்டும் ...!!!

என்ன பேசப்போகிறாய் ..?
என்கிறாயா ..? எப்போது ..?
என்னை பற்றி பேசியிருக்கிறேன் ..?
எல்லாம் உன்னை பற்றி தானே
எப்போதும் பேசுவேன்
என் உயிர் நீ தானே உயிரே ...!!!
@@@

படையில் எல்லாம் இழந்து ...
நிற்கும் வீரனைப்போல்... 
உன்னிடம் எல்லாவற்றையும் ...
வழங்கி இப்போ ஒன்றும் 
இல்லாமல் நிற்கிறேன் ...!!!

என்று இழக்கமாட்டேன் 
நீ தந்த நினைவுகள் 
நான் கொண்ட உண்மை காதல் 
உனக்காக எழுதிய கவிதை 
நீ தந்த நினைவு பரிசு ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக