இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 4 ஜூலை, 2016

குடைக்குள் பெய்யும் மகிழ்ச்சி

மழை .................!
பெய்யும் வரை காத்திருக்கும் .....
தோகை மயில் போல் .....
என்னவளும் காத்திருந்தாள் .....!!!

ஒரு ....................!
குடைக்குள் இரு உடல்கள் ....
நனைந்தது பாதி நனையாதது பாதி .....
வேண்டுமென்று ஒரு உரசல் .....
வேண்டாமல் ஒரு உரசல் .....
ஒரு குடைக்குள் ஊடல் கிண்டல் ....
குடைக்குள் தூற்றல் மழைபோல் .....
மகிழ்ச்சி பெய்துகொண்டே இருந்தது ....!!!

நனைந்து கொண்டிருந்தது உடைகள் ....
நனைய தொடங்கியது மனசு .......
ஓரக்கண்ணால் செல்ல பார்வை ....
சுட்டு விரலால் ஒரு சின்ன சுரண்டல் .....
பெய்யும் மழையின் அழகை ரசிப்பதே .....
எங்கள் எண்ணம் எங்களை நனைபப்தில்லை ....
மழையில் இன்பத்தை குடைக்குள் ..........
ரசிப்பது இன்பத்தில் இன்பம் .....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக