இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 8 ஜூலை, 2016

இதயத்தில்காதல் முத்தானாய் ...!!!

இதயத்தில்காதல் முத்தானாய் ...!!!
----

பஞ்ச வர்ணகிளியே....
தினமும் அணியும்....
ஆடைகள் உன்னை...
அப்படி அழைக்க...
தூண்டுதடி ...!!!

பச்சை கிளிக்கு...
முன்னால் வந்து விடாதே...
உன் கொவ்வை இதழை...
கொத்திவிட்டு சென்று....
விடும் .....!!!

என்னை பொறுத்த...
மட்டில் நீ ஒருகாதல்...
முத்து ....!!!

ஒருதுளி மழைநீர்....
சிப்பிக்குள் முத்தாகிறது....
உன் சின்ன சிரிப்பு.....
என் இதயத்தில்
காதல் முத்தானாய் ...!!!
&

கவிப்புயல் இனியவன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக