இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

நண்பா உன்னை மட்டும் சுமப்பேன் ...

நான் வாழ்க்கையில் ..
சாண் - தான் இறங்கினேன் ..
என் நண்பன் -முழமளவு
ஏற்றிவிட்டான் உயர்வில் ....!!!

காத்திருந்து ...
உதவிசெய்வதில்லை ...
உயிர் நட்பு ...!!!
உதவிசெய்வதற்காக ...
காத்திருப்பதுதான்....
உயிர் நட்பு ....!!!

தந்தை எனக்கு முதல்
உயிர் தந்தார் ...!!!
நண்பன் தினம் தோறும்
உயிர் கொடுக்கிறான் ...!!!
அவன் தந்தது ...
இருதயதானம் ...!!!

நண்பா இந்த இதயத்தில்
காதலுக்கே இடமில்லை ...
உன்னை மட்டும் சுமப்பேன் ...
இறுதி மூச்சுவரை .....!!!