இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 20 நவம்பர், 2016

நெருக்கமாகிறது ...!

 நெருக்கமாகிறது ...!

Post by கவிப்புயல் இனியவன் on Sat Apr 06, 2013 3:36 pm
கவிதையை நீட்டுகிறேன் 
வாங்க மறுக்கிறாய்.
கடிதத்தை நீட்டுகிறேன் 
வாங்க மறுக்கிறாய்.
உன்னை என்னவளாக்கா 
உனக்குஏதேதோபரிசளிக்க 
நினைக்கிறேன் ஆனால், 
அவற்றையெல்லாம் ஒதுக்குகிறாய்.
"உன்னை விடவும் வேறெந்த 
பரிசும் தேவையில்லை" 
என்றுசொல்கிறாய்....
ஆனால் ஒன்று உனக்கு தெரியுமா ...?

ஆசை ஆசையாய் சின்ன சின்ன 
பொருட்களை வாங்கி தருவதில்
தான் காதல் இன்பம் கண்டு 
நெருக்கமாகிறது ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக