இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 25 நவம்பர், 2016

நான் பறித்த கடைசி பூ

நான் பறித்த கடைசி பூ
கவிப்புயல் இனியவன் 2013
-----------
சாமிக்கு பூ பறித்து ..
வைப்பதை பழக்கமாக கொண்டவன் ..
சட்டென்று ஒருநாள்-பூவை
பறித்த என்மனதில் ஒரு -சஞ்சலம்
மரத்தை பார்த்தேன் -அதன் அழுகையை
மலரை பார்த்தேன் -அதன் ஏக்கத்தை
தாயையும் பிள்ளையையும் பிரித்த சோகம்
இதுதான் நான் பறித்த கடைசி பூ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக