இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 25 நவம்பர், 2016

காதல் கொலைகாரன்

காதல் பைத்தியம்
-------
காதலரின் பெயரை சுவரில்
மற்றும் கையில் எழுதுபவர்கள் ..!

காதல் முட்டாள்கள்
-------
காதலருடன் சண்டையிட்டபின்
காயங்களை ஏற்படுத்துபவர்கள்
தனக்கு தானே கையை வெட்டுதல்
.மற்றும் சூடு வைத்தல்..!

காதல் கோழைகள்
--------
காதலில் தோற்றதும்
தற்கொலை செய்பவர்கள் ...!

காதல் வெறியன்
--------
காதலின் பெயரில் ஏமாற்றி
கற்பை சூரையாடுபவன் ...!

காதல் கொலைகாரன்
--------
காதல் நிறைவேற்றவில்லை
என்றவுடன் பழிவாங்க துடிப்பவன் ...!

காதல் பயங்கரவாதி
---------
காதலியின் முகத்தில்
அசிட் வீசுபவனும்
கொலைசெய்பவனும்...!

&
கவிப்புயல் இனியவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக