இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 20 நவம்பர், 2016

கவிதை ஞானி ...!!!!!!!!!!!!


 கவிதை ஞானி ...!!!!!!!!!!!!

  கவிப்புயல் இனியவன் on Sat Apr 06, 2013 3:44 pm
கவிதைகளை 
அழகாக்குவது பொய்கள் தான் ,,
அதை உணர்ந்து படிப்பவன் ரசிகன்..
அதை ஏற்று கொண்டவன் பித்தன் ..
அதை உணர்ந்து கொண்டவன் ஜித்தன்

கவிதை எப்போதும் 
உண்மையாக இருக்க வேண்டும் 
என எதிர்பார்பவர்கள் 
கற்பனைவளம் அற்றவர்கள் .....!

கவிதை தனக்கு 
பொருந்தவில்லை என 
நிராகரிப்பவர்கள் சுயநலவாதிகள் ... !

கவிதைகள் 
பொய்யாகவும் கற்பனையாகவும்
இருக்கலாம் அதில் உண்மைகள் 
இல்லாமல் இருக்கவும் முடியாது .. 
எப்போதும் உண்மையாக இருக்க இருக்கவேண்டுமென்றுமில்லை ....!

கவிதை ஒரு சமூகக்கருவி 
சமூக மாற்றத்துக்கேற்ப 
மாறும் மாறவேண்டும்
தனிபார்வையை விட்டு 
சமூகப்பார்வையால்
பார்ப்பவன் மட்டுமே ..
கவிதை ஞானி ...!!!!!!!!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக