இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 19 நவம்பர், 2016

உண்மைக் காதலின் படிமுறை ..!

உண்மைக் காதலின் படிமுறை ..!

Post by கவிப்புயல் இனியவன் on Thu Apr 04, 2013 4:50 pm
காதல் அரும்பு
************************
கூட்டத்தில் நெரிந்து
கொண்டு கூத்தாடி போல்நின்றேன் -நீ 
பார்த்த பார்வையில் உறைந்து போனேன் 
அந்த கணமே
அரும்பியது காதல் மொட்டு 
உன் மீது ஊமை காதல் .

காதல் ஏக்கம்
************************
மீண்டும் எப்போது சந்திப்போம்..... ..மீண்டும் ..?
நேற்று நடந்தது விபத்தா ?விளையாட்டா ?
தினம் தினம் ஏங்கி ஏங்கி நாட்கள் கூட வருடம் போல் நகர்ந்தது ............!

காதல் மலர்வு
**************************
காதல் என்பது இறைவன் இணைப்பு ..!
விதியும் மதியும் இணைவதால் ஏற்படும் பிணைப்பு
மீண்டும் ஒரு முறை வந்தது அந்த வசந்தம்
இம் முறை விளையாட்டு அல்ல உறுதி ...!

காதல் வாழ்க்கை
****************************
தினம் தோறும் தனியே உணவு அருந்தியதில்லை
தினம் தோறும் தனியே உறங்கியதில்லை
தினம் தோறும் தனியே வெளியே செல்லவில்லை
இதல்லாம் நடக்கிறது என் கற்பனையில் .........!

காதல் வலி
**********************
சந்திக்கும் நேரம் சறுக்கினால் சண்டை இடுவாய்
சற்று நேரம் ஊமையாகி என்னை உறயவைப்பாய்
முள் வினாடி கம்பி முள்போல் குத்தியோடும்
உனக்கும் விளங்கும் காதல் வலிக்குதான் என்று

காதல் ஊடல்
***********************
வலி அதிகரித்தால் தான் ஊடல் அதிகரிக்கும்
வலிக்கும் ஊடலுக்கும் "நேர்கணிய தொடர்பு "
ஊடலின் உச்சம் நீ தந்த முத்தம்
குளிக்கக்கூட வில்லை முத்தம் கரையும் என்று

காதல் தோல்வி
************************
குறுக்கிட்டது நமக்கிடையில் மூன்றாவது தலை
நம் தலையை தனித்தனியாய் பிரித்துவிட்டது
குற்றுயிரும் குறைஉயிருமாய் பலநாள்இருந்தோம்
என்னவென்றாலும் செய்து தொலை என்றது மூன்றாம் தலை ......!

காதல் வெற்றி
***********************
காதலின் வெற்றி காதல் திருமணம் ..!
வாழ்நாள் முழுவதும் -உன் சுவாசத்தில் 
என் இதயம் இயங்குயது தான் ...!காதல் வெற்றி ...

காதல் கைமாற்றம்
******************************
காதலில் வெற்றிகண்ட காதலர் நாம் 
நம் குழந்தை காதலித்தால் எப்படி ? தடுப்பது ?
அப்படி தடுத்தால் காதல் எப்படி ? வளர்வது ?
நம் குழந்தையும் காதல் திருமணம் தான்...!

காதல் மரணம்
************************
உள்ளத்தால் வரும்காதல் மரணம் வரை இருக்கும்
இந்த உண்மை நமக்கும் பொருந்தும்
தொல்லையில்லாமல் சோடியில்ஒன்று மடிந்தது
பூ விழுந்தால் காம்பு மிஞ்சுமா ? அதுவும் விழுந்தது
*********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக