இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 11 செப்டம்பர், 2015

உனக்கு வேதனையில்லை அதுபோதும்....!!!

உனக்கு வேதனையில்லை அதுபோதும்....!!!

நல்லவேளை .....
உன்னை ஒருதலையாக ....
காதலித்தேன் .....
நீ காதலனோடு வந்து ....
நலம் விசாரித்தபோது .....
உதடு சிரித்தது ....
இதயம் கண்ணீர் விட்டது ....!!!

போகட்டும் விட்டுவிடு .....
எனக்கென்ன தோல்வியென்ன ....?
புதிதா ...?
நல்லவேளை உயிரே ....
உனக்கு வேதனையில்லை ...
அதுபோதும் என் காதலுக்கு ....!!!

+
ஒருதலை காதல் உறவுகளுக்காய் ....
கவிப்புயல் இனியவன் தரும் .
கவி மழை தொடர் 05

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக