இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 12 செப்டம்பர், 2015

நம் காதலை போல.,,,!!!

தனிமையில் இருக்க
பயம் ஓன்று இல்லை
எனக்கு
உன் நினைவுகள்
இரு(ற)க்கும் வரை
நீ பேசிய அன்பின் வார்த்தையையும்
பதித்த முத்தத்தின் கதகதபையும்
எண்ணி கொண்டே
இரு(ற)க்கிறேன் ....!!!

வந்து போகின்ற நினைவலைகளில்
அன்றொரு நாள்
நீ சொன்ன பொய்யான
வார்த்தைதான் கனக்கிறது மனதை ....!!!

கடைசி வரை சேர்ந்தே வாழ்வோம்,
சேர்ந்தே சாவோம் என்று,,,,!!!

அலைகள் அடித்து விட்டு
போகின்ற பாதையில்
நாம் நனைத்த பாதங்களையும்
நடந்த காலடி சுவடுகளையும்
தேடி கொண்டு இருக்கிறேன்
நம் காதலை போல.,,,!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக