கொடுமையிலும் கொடுமை .....
சிறுவர் துஸ்பிரயோகம் .....
இரக்கமற்ற அரக்கர்களால் ....
நடந்தேறும் கொடுமை .....!!!
பிஞ்சென்றும் பாராமல் .....
கொடூர குரலாம் அதட்டுவதும் ....
தம்பிள்ளை தானே என்றும் ....
தகுதிக்கு மீறி தண்டிப்பதும் .....
போதையில் வந்து பேசாத ...
வார்த்தைகளை பேசுவதும் ....
போதையை தன் பிள்ளைக்கு ...
தலைமுறையாய் கடத்துவதும் .....
வீட்டுக்குள் நடந்தேறும்
சிறுவர் துஸ்பிரயோகம் ....!!!
உல்லாச பிரயாணம் .....
உள்ளத்துக்கே இருக்கவேண்டும் ....
உடலுக்கல்ல - பணம் படைத்த ....
நாடுகளில் இருந்து வந்தது ....
பட்டினி நாடுகளின் பலவீனத்தை ....
பக்கபலமாக பயன்படுத்தி ....
பாலகரை பயன்படுத்து வெறியர்களே
உங்களுக்கும் சிறார்கள் உள்ளனர் ....!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக