இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

காதல் செய் ....!!! இன்றே செய் ....!!! நன்றே செய் ....!!!

இதயத்தால்
கவிதை எழுதினால் .....
இன்பக்கவிதை ....!!!

கண்ணீரால்
கவிதை எழுதினால் ..
சோகக்கவிதை ...!!!

ஒரு இதயம் துடிக்க ....
மறு இதயம் புரியாமல் இருக்க ....
கவிதை எழுதினால் ....
ஒருதலை காதல்கவிதை  ....!!!

கண்ணால் பேசி ....
சைகையால் உரையாடி ....
கவிதை எழுதினால் .....
காதல் அரும்புக்கவிதை ....!!!

இதயங்களால் பிரியாமல் ....
உறவுகளால் பிரிக்கப்பட்டால் ....
கல்லறை காதல் கவிதை ....!!!

காதல் செய் ....!!!
இன்றே செய் ....!!!
நன்றே செய் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக