இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 ஜூலை, 2013

கவிதை எழுதுவது எப்படி? (02)

3.2.5 மருட்பா

மருள் - மயக்கம்; கலத்தல். வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்து அமைவது இது. வெண்பாவும் ஆசிரியப்பாவும் சமமாக அமையின் சமநிலை மருட்பா எனப்படும். வெண்பாவைவிட ஆசிரியப்பாவின் அடிகள் மிகுந்திருப்பின் ‘வியனிலை மருட்பா’ எனப்படும். 
• மருட்பாப் பொருண்மைகள்
• புறநிலை வாழ்த்து 
‘வழிபடு தெய்வம் நின்னைக் காப்பதாக; நீ நீடு வாழ்க’ என்பது. 

(எ.கா)
அரசியல் கோடா தரனடியார்ப் பேணும் 
முரசியல் தானைவேல் மன்னர் - பரசோன் 
கழலிணை பொதுவில் காப்பாக 
வழிவழி சிறந்து வாழியர் பெரிதே
(பரசு - மழுப்படை; சிவனுக்குரியது) 

• கைக்கிளை 
ஒருமருங்கு பற்றிய காமம். 

(எ.கா)
பருந்தளிக்கு முத்தலைவேல் பண்ணவற்கே அன்றி
விருந்தளிக்கும் விண்ணோர் பிறர்க்கும் - திருந்த
வலனுயர் சிறப்பின் மன்ற வாணனக் 
குலமுனி புதல்வனுக் கீந்த 
அலைகட லாகுமிவ் வாயிழை நோக்கே
(இது வியனிலை மருட்பாவாகும்).
• வாயுறை வாழ்த்து
‘இன்று வெறுப்பளிப்பினும் பின்னர் நன்மைதரும்’ என்று உண்மைப் பொருளை வற்புறுத்தி வாழ்த்துவது. 

(எ.கா)
வம்மின் நமரங்காள் மன்னுடையான் வார்கழல்கண்
டுய்ம்மின் உறுதி பிறிதில்லை - மெய்ம்மொழிமற்
றென்மொழி பிழையா தாகும் 
பின்வழி நுமக்குப் பெரும்பயன் தருமே 

• செவியறிவுறூஉ 
பெரியோர் அறிவுறுத்துவது 

(எ.கா)
வாழ்த்துமின் தில்லை நினைமின் மணிமன்றம்
தாழ்த்துமின் சென்னி தலைவற்கு - வீழ்த்த 
புறநெறி யாற்றா தறநெறி போற்றி 
நெறிநின் றொழுகுதிர் மன்ற 
துறையறி மாந்தர்க்குச் சூழ்கடன் இதுவே 

(இதுவும் வியனிலை மருட்பாவாகும்). 
இவ்வாறு பா வகைகள் அமைகின்றன.

nanri ;amarkkalam  Kaviaruvi Rames

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக