இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 31 ஜூலை, 2013

கே இனியவன் (சென்றியு ) ஹைக்கூக்கள்

எல்லாமே சேர்ந்தது
எல்லாமே சென்றது
தர்மம் இல்லாத சொத்து

**************

இறங்கும் பாதையை தடை செய்யாதீர்
கூக்குரல் இட்ட பயணி
பஸ்ஸின் கூரையில்

**************

சாகசங்கள் செய்து காட்டுவோம்
சன கூட்ட நெரிசலுக்குள்
மோட்டார் சைக்கிள் வீரர்கள்

**************

நன்றி மறந்தவன்
தமிழன்
தாங்க்ஸ் சொல்லுகிறான்

(நடிகர் கமலஹாசன் பேசியதை
அவதானித்தேன் அதிலிருந்து உருவாக்கினேன் )

**************

குழந்தை பருவம்
முதுமை பருவம்
சிரிக்கும் போது பல் ..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக