இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 ஜூலை, 2013

வஞ்சிப்பா

வஞ்சிப்பா

வஞ்சிப்பாவின் இலக்கணத்தையும் வகைகளையும் காண்போம். 
• வஞ்சிப்பா இலக்கணம்
• கனிச்சீர் பயின்று வரும்; பிற சீர்களும் வரும்; சிறுபான்மை நாலசைச் சீர்களும் வருவதுண்டு. 

• வஞ்சித்தளை பயின்று வரும்; பிற தளைகளும் வரலாம். 

• குறளடியாலோ, சிந்தடியாலோ அமையும்; அளவடியும் வருவதுண்டு.

• தூங்கலோசை உடையது. 

• தனிச்சொல் பெற்று வரும்.

• ஆசிரியச் சுரிதகம் கொண்டு முடிவதாக அமையும்.

• சிற்றெல்லை மூன்றடி; பேரெல்லைக்கு வரையறையில்லை. 
• வஞ்சிப்பா வகைகள்
வஞ்சிப்பா இருவகைப்படும். அவையாவன: 

• குறளடி வஞ்சிப்பா
குறளடிகளால் ஆனது. 

(எ.கா)
வளவயலிடைக் களவயின்மகிழ் 
வினைக்கம்பலை மனைச்சிலம்பவும் 
மனைச்சிலம்பிய மணமுரசொலி 
வயற்கம்பலைக் கயலார்ப்பவும் 
நாளும் 
மகிழும் மகிழ்தூங் கூரன் 
புகழ்த லானாப் பெருவண் மையனே

• சிந்தடி வஞ்சிப்பா
சிந்தடிகளால் அமைவது. 

(எ.கா)
துணையில்லாத் துறவுநெறிக் கிறைவனாகி 
எயில்நடுவண் இனிதிருந் தெல்லார்க்கும் 
பயில்படுவினை பத்தியலாற் செப்பியோன் 
புணையெனத் 
திருவுறு திருந்தடி திசைதொழ 
வெருவுறு நாற்கதி வீடுநனி எளிதே

nanri ;kaviaruvi Ramesh

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக