இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 28 ஜூலை, 2013

ஒருகதை ஒரு குறள் ஒரு ஹைகூ

அருள்வேல் ....என்னம்மா ...?மகனே இன்று கோயிலுக்கு போகணும் .
நீ வேலையால் வந்தவுடன் போவமா மகன் ?
நிச்சயமா.. அம்மா.... அப்பாவையும் ஆயத்தமாக இருக்க சொல்லுங்கோ 
வேலையால் வந்தவுடன் ஒரு ஆட்டோ பிடித்து 
போவம் அம்மா ....!!!

என்னங்க ..நம்ம மூத்த மகனின் பிறந்த நாள் அடுத்த கிழமை வருகிறது
நம்ம கோயிலில் ஒரு பூசைக்கு பதியவேணும் 
மாலை கோயிலுக்கு எல்லோரும் போகும் போது அதையும் பதிந்திட்டு வருவமப்பா -அன்னம் -மனைவியின் பரிந்துரை அது .

நல்லது அன்னம் நிச்சயமா மாலை கோயிலுக்கு போய் அத்தனை வேலையையும் செய்வோம் .
.அருள்வேல் நடுத்தர வருமான குடும்பம் தான் ஆனால் 
அழகான அன்பான குடும்பத்தை நினைத்து சந்தோஷ பட்டபடி வேலைக்கு புறப்பட்டார் -அருள் வேல் -


இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் 
நல்ஆற்றின் நின்ற துணை 

குறள் ;41

ஹைகூ 

பெற்றோருக்கு ஊன்றும் தடி 
குடும்பத்துக்கு ஆலம் விழுது 
குடும்ப தலைவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக