இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 ஜூலை, 2013

கஜல் - சொற்பொருள் விளக்கம்

கஜல் - சொற்பொருள் விளக்கம் 

கஜல் என்ற அரபிச் சொல்லின் நேரடிப் பொருள் ‘மான்கண்’ என்பதாகும். ‘ழுயணநடடந’ என்ற சொல்லுக்கு வட ஆப்பிரிக்காவில் காணப்படும் சிறிய, மென்மைத் தன்மை வாய்ந்த மான் வகை என்பது பொருள். இவ்வகை மான்கள் ஆசியா, ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன. இவை, தம்முடைய அழகான உடலசைவுகளுக்காகவும், மென்மை வழியும் கண்களுக்காகவும் சிறப்போடு குறிப்பிடப்படுகின்றன4 என்று ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி கூறுகிறது. கஜல் என்ற சொல்லுக்கு “வனப்பும், மென்னோக்குமுடைய சிறுமான் வகை; அரபிய நாட்டு மான்”5 என்று சென்னைப் பல்கலைக் கழக ஆங்கிலம்-தமிழ் அகராதி எடுத்துக்காட்டுகிறது.

அகராதிப் பொருள்
அமெரிக்கானா பேரகராதியிலிருந்து, “கஜல் என்பது இஸ்லாமிய இலக்கிய வடிவம், பாடப்படும் கவிதைகளில் ஒரு வகையானவை, பொதுவாக அழகுணர்வோடும், சுருக்கமாகவும், சிறப்பாகக் காதல் குறித்துப் பாடப்படும் வடிவமாகும்”6 என்று அறிய முடிகிறது. பிரிட்டானிகா பேரகராதி, கஜல் என்பது காதலின் பரிமாணங்களைச் சுருக்கமாக வெளிப்படுத்தும் பாடல் வடிவமாகும் என்கிறது.

வழக்குப் பொருள்
எம்.ஆர்.எம். விளக்கியுரைக்கின்ற போது, “அரபிச் சொல்லான இதன் பொருள் பெண்களுடன் பேசுதல், காதல் மொழி பேசுதல் என்பதாகும். பிரிவாற்றாமை பற்றியும் காதலினால் எற்படும் விரக வேதனையைப் பற்றியும் எடுத்துரைக்கும் ஒரு வகைப் பாவினத்திற்கு இப்பெயர் கூறப்படுகின்றது”7 என்பார்.
இரா. முருகன் கூறுகையில், “பெண்ணிடம் பேசுவது என்ற பொருள் கொண்ட அந்தச் சொல் பெண்ணைப் பற்றி, காதல் பற்றி, பிரிவுத்துயர் பற்றி, அதை மறக்க மதுவில் மூழ்கும் சராசரி மனிதனை, சக்கரவர்த்தியைப் பற்றிய படைப்பாக நீட்சியடைகிறது”8 என்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக