இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 31 ஜூலை, 2013

கொடூரம் கொடூரம் -ஒரு தலை காதல் ...!!!

சொல்லவா விடவா ...?
சொன்னால் ஏற்பாயா...?
நிராகரிப்பாயா ...?
மண்புழு மேல் மண்ணெண்ணையை ..
ஊற்றியதுபோல் துடிக்கிறேன்
புரிந்துகொள் ..இல்லை
ஊரைவிட்டு பிரிந்து செல் ...!!!

சீ... சீ... நீ ஊரை விட்டு
பிரிந்து சென்றாலும் -உன்
நினைவில் விட்டு பிரியவா போகிறேன் ...?
தயவு செய்து ஊரைவிட்டு சென்றுவிடாதே ...!!!

என் முன் யாருடனும் கதைக்காதே ..
என் இதயம் தாங்க தயார் இல்லை ...!!!
இல்லை இல்லை நான் சந்தேகப்படவில்லை ..
நீ நன்றாக பேசு ...!!!

அப்போது என்றாலும் உன் சிரிப்பை ..
காணும் பாக்கியம் கிடைக்கட்டும் ..!!!
காதலித்து தொலைக்கலாம் ..
நீ மறுத்தால் என்ற பயம் ...
காதலை சொல்ல மறுக்கிறது ...!!!
கொடூரம் கொடூரம் -ஒரு தலை காதல் ...!!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக