இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 31 ஜூலை, 2013

பறவைகள் கற்று தந்த படிப்பினைகள் ஹைக்கூ வடிவில்

பறவைகள் கற்று தந்த படிப்பினைகள்
சில ஹைக்கூ வடிவில்

பிறர் பிள்ளையை
தன் பிள்ளையாக வளர்
குயில்

*******************

அழகாக இருந்தால்
ஆபத்தை சந்திப்பாய்
கிளி

*******************

கூட்டு குடும்பத்தை
கற்று தந்தது
காகம்

******************

நல்ல வாய்ப்பு வரும் வரை
பொறுமை வேண்டும்
கொக்கு

******************

உயரே சென்றால் நிலையை
நிலையாக வைத்துக்கொள்
பருந்து 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக