இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 ஜூலை, 2013

தொன்மம்:

தொன்மம்:
புராண, இதிகாச நிகழ்வுகளை ஒட்டியோ, திரித்தோ, மறுத்தோ இக்கால நிலைக்கேற்ப குறியீடு ஆக்குதல் தொன்மப் படிமம் ஆகும்.
(எ-கா):
கல்லாகவே இருந்துவிடுகிறேன்
மிதித்து விடாதே
சுற்றிலும் இந்திரன்கள் (ராஜ.முருகுபாண்டியன்)
என்பது கௌதமரின் சாபத்தால் கல்லான அகலிகை இராமனின் கால்பட்டுச் சாபவிமோசனம் அடைந்து பெண்ணான நிகழ்வை அடியொற்றியது. பெண்ணாக இருப்பதினும் கல்லாக இருப்பதே பாதுகாப்பானது என்றால் இச்சமூகம் எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறது என்பது இதன்வழிப் புலப்படுகின்றது.
(எ-கா):
ஆராய்ச்சிமணி அடித்த மாடுகள்
அரண்மனைத் தட்டில்
பிரியாணி (அவைநாயகன்)
என்னும் கவிதை, மனுநீதிச் சோழனிடம் முறையிட்ட கன்றை இழந்த பசுவின் கதறலையும், அக்கதறல் கேட்டுத் தன் மகனையே கொன்று முறைசெய்த மன்னனின் நீதிமுறையையும் கொண்டு அமைக்கப் பட்டது. நீதிமன்றங்கள், தக்க தீர்ப்பு வழங்காமல் குற்றவாளிக்கு ஆதரவாக இருப்பதையும், முறையிட வந்தவர்களையே தண்டிப்பதுமாகிய நிலையில் இருக்கும் நாட்டு நடப்பினைப் புலப்படுத்துகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக