இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 29 ஜூலை, 2013

கே இனியவன் ஹைக்கூக்கள்

தவறுகளை நியாயப்படுத்தும்
விட்ட தவறை உணர்த்தும்
கண்ணீர்
**********************
உலகை மறந்தேன்
என்னை இழந்தேன்
அவள் சிரிப்பு
***********************
தெரிந்தும் வரும்
தெரியாமலும் வரும்
தவறு
************************
தோல்வி நிறைந்தது
வெற்றி நிச்சயம்
முயற்சி
************************
பெற்றோருக்கு ஊன்றும் தடி
குடும்பத்துக்கு ஆலம் விழுது
குடும்ப தலைவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக