இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 ஜூலை, 2013

ஹைக்கூ பற்றி மேலும்

ஹைக்கூ பற்றி மேலும்... நன்றி - இராஜ.தியாகராஜன் 

துளிப்பாக்களைப் பற்றிய விவரங்களைக் கண்டேன். முகநூலின் நான்கு கட்டுரைகளாக நான் எழுதிப் பகிர்ந்து கொண்ட குறிப்புகளை இங்கே பகிர்கிறேன்.
முன்னர் ஒரு முறை துளிப்பாக்களின் இலக்கண அமைப்பினைப் பற்றியொரு குறிப்பினை எழுத்தி இருந்தேன். அதன் பின்னர், பாவலர் திரு கரிசலார் அவர்களுடன், ஒருமுறை துளிப்பாக்கள், இயைதுளிப்பாக்கள், நகைதுளிப்பாக்கள், அவற்றின் அமைப்புகள், படிம உத்திகள் இவற்றை சில எடுத்துக் காட்டுகளுடன் மடலாடல்கள் செய்திருந்தேன்.
இவற்றை பல புத்தகங்களில் இருந்தும், இணையத்தில் சென்னை பல்கலை கழக பாடங்களில் இருந்தும் நான் அறிந்தேன். ஆனால் நான் அதிகம் இவ்வகைப் பாக்களை ஏனோ இயற்ற முற்படவில்லை! இதில் வரும் விவரங்கள் எல்லாமே நான் படித்து அறிந்தவையே! சென்னை பல்கலைக் கழக பாடத்திட்டத்திற்கு என் உளமார்ந்த நன்றி. துளிப்பாக்கள் வகையிலான கவிதை இயற்ற வேண்டும் என்று முனையும் அன்பர்களுக்கு இந்த கட்டுரை உதவும் என்று நம்புகிறேன்.
ஜப்பானிய இலக்கியத்தில் உருவான ஹைக்கூ, 5-7-5 என்ற அசையமைப்பு கொண்டு, ஜென்(Zen) குருமார் தத்துவத்தை பரப்புதற்கும், இயற்கையைப் போற்றுவதற்கும் பயன்பட்டது. இதுவல்லாது வேறு கருக்களைக் கொள்வது துளிப்பா ஆகாது என்பனர் பலர். தமிழிலக்கியத்தில் இவ்வடிவம் படிமம், குறியீடு, தொன்மம், முரண், அங்கதம், விடுகதை, பழமொழி, வினாவிடை, உவமை, உருவகம் எனப் பல்வேறு உத்திகளில் அமைக்கப்படுவதோடு, சமூக விமர்சனத்திற்கும் சமுதாயக் கேடுகளைச் சாடுதற்கும் தமிழ்த் துளிப்பா அன்பர்கள் கைக் கொள்கின்றனர் எனலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக