இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 28 ஜூலை, 2013

என் உயிரினுள் உறைந்த உயிரடா -நீ

அவன் :

உன்னை
கண்டு பொறாமைபடுகிறேன் ...
உன்னை சுற்றி உறவுகள்
பாசம் காட்டும் அண்ணா ..
குறும்பு செய்யும் தம்பி தங்கை ...
ஊட்டி விட பாட்டி ...
உன்னை கல்லூரிக்கு  கூட்டி செல்ல
அப்பா ...
குளிப்பாட்ட அம்மா ...
கேட்டதை வாங்கி கொடுக்க ...
தாத்தா ...
இத்தனையும் உள்ள நீ
எதற்காக என்னை விரும்புகிறாய் ...?
யாரும் அற்றவன் நான் ...
உன் காதலை தவிர ....!!!

அவள் ;

உன்னை போல் எனக்கு
அழகான சொந்தம் யாருமில்லை
உன்னை இன்றி வேறு
சொந்தங்களை விரும்பியதுமில்லை
என் உயிரினுள் உறைந்த
உயிரடா -நீ
உன் காதலும்
என்  காதலும்
தான் எமக்கு தேவையான உறவு ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக