இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 31 ஜூலை, 2013

மண வாழ்வா ...? மனச்சாவா ....?



காதல் புரிந்து கொண்டால்...
மணவாழ்வு ....!!!
பிரிந்து சென்றால் ...
மனச்சாவோ ...???

உன்னை பார்த்த அந்த நொடி ..
என் இமைகளுக்கு பூட்டு ...
போட்டு பூட்டிவிட்டேன் ....
உன்னை மட்டும் பார்ப்பதற்காக ...!!!

உன் எண்ணங்கள் என்ன ....?
மின்னலா ...? இப்படி என்னை ...
எரிக்கிறதே ...???
தயவு செய்து குளிர்மைப்படுத்து ...!!!

உன் கண்ணாலும் என் கண்ணாலும் ..
விதைக்கப்பட்ட விதை தான் நம்
காதல் ....!!!

இன்னும் எந்த அகராதியை...
தேடுகிறாய் ..??
என்னை விரும்புகிறேன் ...
என்று சொல்லும் ...
ஒரு வார்த்தைக்காக ....???

நீ சொல்லும் அந்த வார்த்தைதான் ...
மணவாழ்வு ....!!!
மனச்சாவு ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக