இந்த வலைப்பதிவில் தேடு
வியாழன், 4 ஜூலை, 2013
கே .இனியவன் ஹைக்கூக்கள்
இல்லாவிட்டாலும் பிரச்சனை
இருந்தாலும் பிரச்சனை
பணம்
*******************************
உடல் சுத்தம்
உள்ளச்சுத்தம்
தியானம்
******************************
மழலைகளிடம்
மூட நம்பிக்கை விதைப்பு
சரஸ்வதி இலை படிப்பு தரும்
************************************
பரவசம் அடைந்தனர்
பார்க்கும் மனிதர்கள்
கவலையில் கூட்டில் கிளி
**********************************
அம்மாவை விட
மழலைகள் மகிழ்ந்தன
பாடசாலை விடுமுறை
**********************************
இளமையின் இனிமை
தாமதமாக இனித்தது
முதுமை
*********************************
தோற்றம் மறைவு
சாதாரண மனிதனுக்குத்தான்
போராளிக்கு இல்லை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக