அவள்...
காதலை தருவாள்
காதலை தருவாள்
என்று எத்தனையோ
நாட்கள் ஏங்கியிருந்தேன்
தர மறுத்தாள்
கவலை அடைந்தேன் ...!!!
கவிதையை தந்தாளே
என்று நினைக்கும் போது
ஓரத்தில் ஒரு துளி கண்ணீர்
இன்பமாக ஓடுகிறது ....!!!
உறங்கும் போது தூக்கம்
வர மறுக்கும் விழிகளுக்கு
அவள் நினைவுகள் தரும்
சுகத்தால் ஒரு துளி கண்ணீர்
சுமையுடன் சுகமாய்
வடிகிறது .....!!!
என் மூச்சு காற்று
இரு துவாரங்களில்
நடைபெற்றாலும் -அவள்
என்னை ஏற்கும் வரை
ஒற்றை துவார மூச்சாக
வாழ்கிறேன் - இறந்தாலும்
அவளுக்காகா காத்திருக்கும்
ஒற்றை துவார மூச்சு ....!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக