இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 4 ஜூலை, 2014

ஒற்றை ரோஜா வாடவில்லை ....!!!


இன்னும் என்னை விட்டு
விலகமாட்டேன் என்கிறது
சிறு வயதில் முதல் தோன்றிய
ஒற்றை வலி காதல் ....!!!

பத்திரமாக அவளுக்காய்
சேர்த்து வைத்த பொருட்கள்
இத்து போய் நூலாகியது
செத்து போகமாட்டேன்
என்கிறது அந்த காதல் ....!!!

இனி ஒரு பலனும் இல்லை
அறிந்தும் அழியமாட்டேன்
அடம் பிடிக்கிறது
அந்த காதல் .......!!!
இப்போது நினைந்தால்
வேதனை .......
மீண்டும் நினைத்து பார்த்தால்
வெட்கம் -என்னை அறியாமல்
தனியே இரண்டையும்
செய்கிறது இதயம் .....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக