இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 3 ஜூலை, 2014

சொல் கேளாதவன் வாழ்க்கை ...!!!

பெற்றோர் சொல் கேளாதவன்
பெற்றோர் இருந்தும் அநாதை ...!!!

சொந்தங்களின் சொல் கேளாதவன்
உறவுகள் இருந்தும் தனிமரம் ....!!!

நண்பனின் சொல் கேளாதவன்
தனித்து விடபட்ட நாடோடி ....!!!

காதலி சொல் கேளாதவன்
இதயமிருந்தும் பிணமானவன் ...!!! 

முதலாளி சொல் கேளாதவன்
வருமானத்துக்கு எங்கும் அடிமை ...!!!

ஆசிரியர் சொல் கேளாதவன்
அறிவிருந்தும் முட்டாள் ....!!!

ஞானியின் சொல் கேளாதவன்
பகுத்தறிவு இருந்தும் பட்டமரம்...!!!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக