கவிதை தாய்க்கு கவிதை
---------------------------------------
என்னை தினமும்...
இல்லை இல்லை இல்லை...
ஒவ்வொரு நொடியும்...
என்னை ஈன்று கொண்டு...
அழகையும் அழுக்கையும்
ரசிக்கும் என் கவிதை தாயே
உனக்கு ஒரு கவிதை .....!!!
என் கவிதைகள் சில
நேரம் தடுமாறலாம் ,
சிலவேளை பிறர் ரசிக்கல்லாம்
சில வேளை காறி உமிழ்ளலாம்
எதுவாக இருந்தாலும் என்னை
கட்டி பிடித்து எழுது மகனே
எழுது என்று தோளில் தட்டி
ஊக்கம் தரும் கவிதை தாயே
உனக்கு ஒரு கவிதை .....!!!
கவிதை ஒரு பொழுது போக்கு
கருவி இல்லை அது
உள்ளுணர்வுடன் தோன்றும்
உன்னத உணர்வுகளின்
உயிர் வரிகள் -அந்த வரியை
தரும் என் கவிதை தாயே
உனக்கு ஒரு கவிதை ....!!!
தாயே கவிதை தாயே
நீ தந்த தைரியத்தில் ஏதோ
கிறுக்குகிறேன் என்னை கவிஞர்
என்கிறார்கள் எல்லா புகழும்
தாயே உனக்கு தான் ... !!!
என்னை கருவில் சுமந்து
இப்போதுதான் ஈன்ற தாயே
உனக்கு ஒரு கவிதை ....!!!
கவிதை என்பது ஒரு கலை ...!!!
பட்டம் பெற்று வரைவதில்லை
பட்டம் பெற்றால் வரையலாம்
என்றும் இல்லை
அனுபவங்கள் அவதானங்கள்
வரியாகும் போது கவிதை
ஆகுமடா என்று தைரியம்
தந்தவளே தாயே ..
உனக்கு ஒரு கவிதை ....!!!
தாயே என் மூச்சு காற்று
நிற்கும் வரை -என் கைகள்
செயல் இழக்கும் வரை
எழுத வரம் தாயே ..
ஈன்ற குழந்தையை தூக்கி
எறியும் நன்றி கெட்ட தாய்
இல்லை நீ ..
பண்பாட்டின் மொத்த உருவமே
என் எழுத்து கருவியில் இருக்கும்
எப்போதும் உன்னுடன் உள்ள
தொப்புள் உறவு ...!!!
தாயே உனக்கே எல்லா
கவிதையும் சமர்ப்பணம் ...!!!
---------------------------------------
என்னை தினமும்...
இல்லை இல்லை இல்லை...
ஒவ்வொரு நொடியும்...
என்னை ஈன்று கொண்டு...
அழகையும் அழுக்கையும்
ரசிக்கும் என் கவிதை தாயே
உனக்கு ஒரு கவிதை .....!!!
என் கவிதைகள் சில
நேரம் தடுமாறலாம் ,
சிலவேளை பிறர் ரசிக்கல்லாம்
சில வேளை காறி உமிழ்ளலாம்
எதுவாக இருந்தாலும் என்னை
கட்டி பிடித்து எழுது மகனே
எழுது என்று தோளில் தட்டி
ஊக்கம் தரும் கவிதை தாயே
உனக்கு ஒரு கவிதை .....!!!
கவிதை ஒரு பொழுது போக்கு
கருவி இல்லை அது
உள்ளுணர்வுடன் தோன்றும்
உன்னத உணர்வுகளின்
உயிர் வரிகள் -அந்த வரியை
தரும் என் கவிதை தாயே
உனக்கு ஒரு கவிதை ....!!!
தாயே கவிதை தாயே
நீ தந்த தைரியத்தில் ஏதோ
கிறுக்குகிறேன் என்னை கவிஞர்
என்கிறார்கள் எல்லா புகழும்
தாயே உனக்கு தான் ... !!!
என்னை கருவில் சுமந்து
இப்போதுதான் ஈன்ற தாயே
உனக்கு ஒரு கவிதை ....!!!
கவிதை என்பது ஒரு கலை ...!!!
பட்டம் பெற்று வரைவதில்லை
பட்டம் பெற்றால் வரையலாம்
என்றும் இல்லை
அனுபவங்கள் அவதானங்கள்
வரியாகும் போது கவிதை
ஆகுமடா என்று தைரியம்
தந்தவளே தாயே ..
உனக்கு ஒரு கவிதை ....!!!
தாயே என் மூச்சு காற்று
நிற்கும் வரை -என் கைகள்
செயல் இழக்கும் வரை
எழுத வரம் தாயே ..
ஈன்ற குழந்தையை தூக்கி
எறியும் நன்றி கெட்ட தாய்
இல்லை நீ ..
பண்பாட்டின் மொத்த உருவமே
என் எழுத்து கருவியில் இருக்கும்
எப்போதும் உன்னுடன் உள்ள
தொப்புள் உறவு ...!!!
தாயே உனக்கே எல்லா
கவிதையும் சமர்ப்பணம் ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக