இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 8 ஜூலை, 2014

காதல் ஏக்க சுகம் ....!!!

காதல் ஏக்க சுகம் ....!!!

உன்னை நான் ஆயிரம் 
முறை பார்க்க துடித்தேன் 
நீ குனிந்த தலை நிமிராமல் 
இருக்கிறாயே 
அதுதான் 
காதல் ஏக்க சுகம் ....!!! 

உன்னோடு ஆயிரம் 
வார்த்தைகள் பேச துடித்தேன் 
நீ மௌனமாய் இருக்கிறாயே 
அதுதான் 
காதல் ஏக்க சுகம் ....!!! 

கனவிலும் நினைவிலும் 
உன்னை நினைக்க 
கண்ணெதிரே தெரியாமல் 
போகிறாயே  
அதுதான் 
காதல் ஏக்க சுகம் ....!!! 

காதலை 
மனதில் சுமந்து கொண்டு 
காதலே இல்லை என்று 
இருக்கிறாயே 
அதுதான் 
காதல் ஏக்க சுகம் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக