இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 2 ஜூலை, 2014

அக அழகை பார்க்கும் கண்ணாடியை ....!!!

புற அழகில் மயங்கி
முகம் பார்க்கும் கண்ணாடி
முன் அங்கும் இங்கும்
உடலை திருப்பி திருப்பி
அழகு பார்த்து வெளியில்
சென்றேன் .....!!!

என்னை
விட அழகானவன்
படித்தவன் பணம்
படைத்தவன் முன்
வருகையில் அகம் இருண்டு
முக அழகும்   கெட்டது...
தேடுகிறேன் அக அழகை
பார்க்கும் கண்ணாடியை ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக