இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 22

22) என்னவளே நீ மட்டும் ..?

நோய்கள் ஆயிரம் ஆயிரம்
நோய்க்கான மருந்துகளும்
ஆயிரம் ஆயிரம் ....!!!
பொருத்தமான நோய்க்கு
பொருத்தமான மருந்து
அபூர்வமோ அபூர்வம் ...!!!
என்னவளே நீ மட்டும்
என் நோயாகவும் ..
என் மருந்தாகவும்
இருக்கிறாயடி .....!!!

திருக்குறள் : 1102

புணர்ச்சிமகிழ்தல்

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 22

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக