இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 24

24) எங்கே கற்று கொண்டாளோ..?

உன்னை விட்டு விலகினால்
சுடுகிறாய் ....!
அருகில் வந்தால்
குளிர்கிறாய் ..!
அபூர்வமான இந்த தீயை
உள்ளத்தில் ஏற்றியவளே...!!!
இயற்கைக்கு மாறான
தீயை எனக்குள் கொண்டுவரும்
இந்த மாய வித்தையை
எங்கே கற்று கொண்டாளோ..?

திருக்குறள் : 1104
புணர்ச்சிமகிழ்தல்
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்?
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 24

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக